Saturday, July 3, 2010

தமிழ் இணைய மாநாடு

புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பத்ரி சேஷாத்ரி, கோயம்புத்தூர் அ.ரவிசங்கர் மற்றும் தேனி. எம்.சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.

தமிழ் இணைய மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் உமர்தம்பி அரங்கில் 24-06-2010 அன்று "தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் திரு.மணி எம்.மணிவண்ணன், சைமன்டெக் கார்ப்பரேஷன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கட்டுரை வாசிப்பு நிகழ்வில் மாலை 4.00 மணியிலிருந்து 4.30 மணி வரை ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி சுபாஷினி ட்ரெம்மல் "தமிழ் மரபு சார்ந்த தகவல்களின் தகவல் வங்கி, மின்நூல்கள், ஓலைச்சுவடிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இணைய அட்டவணை" எனும் தலைப்பிலும், மாலை 4.30 மணியிலிருந்து 5.00 மணி வரை வேலூர் கல்லூரி நூலகர் திரு. அசாதுல்லா, "தமிழ் மின்னணு பெட்டக மேலாண்மை" எனும் தலைப்பிலும், மாலை 5.00 முதல் 5.30 மணி வரை சென்னை, மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், "மின்னணு அருங்காட்சியகம்" எனும் தலைப்பிலும், மாலை 5.30 முதல் 6.00 மணி வரை நான் "தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்" எனும் தலைப்பிலும் கட்டுரை வாசித்தோம்.

யாழன் சண்முகலிங்கம் அரங்கில் 26-06-2010 அன்று "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் திரு. பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் திரு. மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. அ. ரவிசங்கர், (ஈரோட்டைச் சேர்ந்த திரு. காசி ஆறுமுகம் பெயர் இடம் பெற்றிருந்தது. ஏனோ அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.) ஆகியோருடன் நானும் "வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா" குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-தேனி. எம்.சுப்பிரமணி







No comments:

Post a Comment