Tuesday, January 18, 2011

தமிழ் விக்கிப்பீடியா, நூல் வெளியீடு



சென்னை குரோம்பேட்டையிலுள்ள சென்னை தொழில்நுட்ப நிறுவன (MIT) வளாகத்தில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப்பட்டது.

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டன. இதில் வட அமெரிக்கப் பெருநிலப்பகுதியில் உள்ள 9 நாடுகளும், தென்னமெரிக்க பெருநிலப் பகுதியில் 11 நாடுகளும் ஐரோப்பிய பெருநிலப் பகுதியில் 40 நாடுகளும் ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியில் 17 நாடுகளும் ஆசியப் பெருநிலப் பகுதியில் 40 நாடுகளும், பெருங்கடல் பகுதியில் 2 நாடுகளும் என மொத்தம் 119 நாடுகளில் இதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொண்டாட்டங்களில் அதிக அளவாக இந்தியாவில் 95 இடங்களிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 32 இடங்களிலும், சீனாவில் 24 இடங்களிலும், பாகிஸ்தானில் 15 இடங்களிலும், ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா 12 இடங்களிலும், பிற நாடுகளில் குறைவான இடங்களிலுமாக இந்த விழா நடைபெற்றன.

சென்னை குரோம்பேட்டையிலுள்ள சென்னை தொழில்நுட்ப நிறுவன (MIT) வளாகத்தில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழாவிற்கு விக்கி மணியன் தலைமை தாங்கினார். செங்கைப் பொதுவன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் ஆங்கில விக்கிப்பீடியா சார்பில் ரவிசந்தர், அனுஷா கோஸ், மலையாள விக்கிப்பீடியா சார்பில் ஜெஸ்ஸி பிரான்சிஸ், கணேஷ் கோபால், தமிழ் விக்கிப்பீடியா சார்பில் மாஹிர், பரிதிமதி ஆகியோர் விக்கிப்பீடியா குறித்து பேசினர்.

இவ்விழாவில் தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூலை கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி வெளியிட, பத்திரிகையாளர் சுகதேவ் முதல் பிரதியையும், கவிஞர் இமாம் கவுஸ் மொய்தீன் இரண்டாம் பிரதியையும் பெற்றுக் கொண்டனர்.

விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்க்லளுடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு குறித்த மகிழ்ச்சியையும் நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணிக்கு வாழ்த்தையும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விக்கிப்பீடியா டீசர்ட் வழங்கப்பட்டது. முடிவில் தேனி.எம்.சுப்பிரமணி நன்றி கூறினார்.

நூல் வெளியீடு குறித்த நிகழ்படத் தொகுப்பு

முத்துக்கமலம் 15-01-2011



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-01-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. பொங்கலோ பொங்கல்! - கவிதை - சித்ரா சிவக்குமார்.

2. எதிர்கால இளைஞனே! - கவிதை - தஞ்சை ஹேமலதா.

3. தமிழ் மறந்து...! - கவிதை - விஷ்ணுதாசன்.

4. எங்கும் இன்பம் பொங்க...! - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.

5. சருகின் சங்கீதம் - கவிதை - முனைவர் வி.தேன்மொழி.

6. வருகிறாள்...! வருகிறாள்...!! - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.

7. இருந்தும்... இறந்தும்...! - கவிதை - தஞ்சை ஹேமலதா.

8. காதல் செய்வோம் வா...! - கவிதை - பிரியா.

9. கூடி மகிழ்வோம் வாரீர்! - கவிதை - வித்யாசாகர்.

10. கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம் - வித்யாசாகர்.

11. கூலிக்காரன் - கவிதை - கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத்.

12. வைகுண்டரின் தவமும் போதனையும் - அய்யா வைகுண்டர்- தொடர் - நெல்லை விவேகநந்தா.

13. மனைவிக்காக உப்பைத் துறந்த இறைவன் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

14. பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் மொழிநடை - கட்டுரை - முனைவர்.மா.தியாகராஜன்.

15. புறநானூற்றில் மகட்பாற்காஞ்சித் துறை - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.

16. வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது சரியா? - ஜோதிடம் - மகரிஷி சீடன்.

17. உங்கள் ராசி பலன்கள் - ஜோதிடம் - மகரிஷி சீடன்.

18. வலைப்பூக்கள்-98 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

19. நாங்கள் மீன்பிடிகாரர்கள் - பகுதி 4 - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

20. அதுவரை பொறுத்திரு - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

21. துன்பமா? என்னை விட்டுவிடு! - குட்டிக்கதை

22. நாத்திகன் சிறந்த துறவியா? - குட்டிக்கதை

23. உன்னை நீ அறிவாயா? - கதை - ஆர்.கனகராஜ்

24. காமராஜருக்கு இவ்வளவு துண்டுகளா? - சிறுவர் பகுதி - கணேஷ் அரவிந்த்.

25. இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா? - சிரிக்க சிரிக்க - தஞ்சை ஹேமலதா.

26. இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுகள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

27. காதல் என்பது... - பொன்மொழிகள் - தேனி.எஸ்.மாரியப்பன்.

28. தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு - நிகழ்வுகள்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.

Saturday, January 1, 2011

முத்துக்கமலம் 01-01-2011



அன்புடையீர்,

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-01-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம். - சிரிக்க சிரிக்க - தேனி.எஸ்.மாரியப்பன்.

2. காதல் உள்ளம் - கட்டுரை - முனைவர் வி.தேன்மொழி.

3. முத்துக்குட்டி வைகுண்டரான கதை - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.

4. திருமணத்திற்கு முன் காதல்... - பொன்மொழிகள் - தேனி.எஸ்.மாரியப்பன்.

5. மரணம் நிச்சயம்! - கவிதை - வித்யாசாகர்.

6. புது உலகு தா...! - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.

7. புத்தாண்டே வருக...! - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.

8. கவிதை! - கவிதை - முனைவர் வி.தேன்மொழி.

9 விரதத்தைத் தூக்கி எறி... - கவிதை - கிருஷ்ணா.

10. வெள்ளம் - கவிதை - எம்.வை.எம்.மீஆத்.

11. மாலை வேளை - கவிதை - எம்.வை.எம்.மீஆத்.

12. கவிதை தேடி...? - கவிதை - வித்யாசாகர்.

13. நீயும் பெண்தானே? - கவிதை - எஸ். சதீஷ்குமார்.

14. காகிதத் திரையோவியம் - கவிதை - பிரதீபா.

15. கருவின் ஆசை - கவிதை - முனைவர்.கு.சிதம்பரம்.

16. பாறையில் பயிர்? - கவிதை - வேதா இலங்காதிலகம்.

17. வீரத்தமிழச்சி - கவிதை - வித்யாசாகர்.

18. புயலாடும் பெண்மை! - கவிதை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்.

19. கண்ணீரில் பிறந்த காவியம்! - கவிதை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்.

20. புதிய முகத்துடன் வா! - கவிதை - பாரதியான்.

21. சுனாமியின் சுவடுகள் - கவிதை - கிருஷ்ணா.

22. ஆடுகளத்தில் அநாதையாய்...! - கவிதை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.

23. மரணத் தேதி! - கவிதை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.

24. இந்தியாவில் என்ன நடக்கும்? - ஜோதிடம் - மகரிஷி சீடன்.

25. உங்கள் ராசி பலன்கள் - ஜோதிடம் - மகரிஷி சீடன்.

26. வலைப்பூக்கள்-97 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி

27. அழகியின் இசைக்கு ஆடிய ஏழுமலையான் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

28. பண்டைய தமிழர் உணவுகள் - கட்டுரை - முனைவர்.சி.சேதுராமன்.

29. குறுந்தொகையில் உவமை - கட்டுரை - முனைவர் மா. தியாகராசன்.

30. துறவறம் சாதாரணமானதா? - குட்டிக்கதை

31. இந்து சமய (என்) நம்பிக்கைகள்! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்

32. கற்பனை வாழ்க்கையை விரட்டுங்கள் - மனம் திறந்து - ஆர்.ஏ.பரமன் (அரோமணி)

33. கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா? - குட்டிக்கதை

34. கடலுக்குப் போகும் குடும்பம் - கடல்-குறுந்தொடர்கதை - வாசுகி நடேசன்.

35. தமிழகப் பண்டைய அளவை முறைகள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்

36. அலட்சியப்படுத்தப்பட்ட அறிவுரை - சிறுவர் பகுதி - முனைவர்.கு.சிதம்பரம்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

புத்தாண்டைக் கொண்டாடுங்கள்!!

புதுமைப் படைப்புகளைப் பதிவிட வாருங்கள்!!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.