Monday, January 18, 2010

தேனி டைம்ஸ்

தேனி டைம்ஸ் எனும் பெயரில் தேனி மாவட்டச் செய்திகளை ஆங்கிலத்தில் அளித்து வரும் தளம் இது. இதுவும் முத்துக்கமலம் இணைய இதழின் ஒரு வெளியீடுதான்.

இந்த ஆங்கில வழியிலான இணைய தளத்தைப் பார்வையிட....

http://thenitimes.sitesled.com/

Friday, January 15, 2010

முத்துக்கமலம் 15-01-2010

01-06-2006 முதல் தொடர்ந்து மாதமிருமுறையாக புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2010 ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில்....

1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - தாமரைச்செல்வி - ஆன்மீகக் கட்டுரை

2. இந்திரலோகத்தில் மாவீரர்கள்! - வாசுகி நடேசன் - கதை

3. அறிவியலும் முன்னேற்றமும்! - தமிழநம்பி. - கவிதை

4. ஊமையாக்கியது யார்? -த.சத்யா.- கவிதை

5. பொங்கல் வாழ்த்துக்கள்.... -கவி.செங்குட்டுவன்.- கவிதை

6. நட்புடன் நண்பனுக்கு... -சக்தி சக்திதாசன்.- கவிதை

7. உன் பிறந்த நாளில்....-ராம்ப்ரசாத். - கவிதை

8. கடவுளைத் தேடி... -பாளை சுசி. - கவிதை

9. மோட்சம் போக...? -பாளை சுசி. - கவிதை

10. முதியோர்...? -பிரதீபா.- கவிதை

11. மதமா? மனிதமா? -மு.சந்திரசேகர்.- கவிதை

12. வலைப்பூக்கள்-75 - தமிழ் வலைப்பூக்கள் முகவரிகள் மற்றும் குறிப்புகள்

13. வாத்சாயனார் சொன்ன ரகசியம். - நெல்லை விவேகநந்தா - மனம்திறந்து கட்டுரை

14. முத்தயுத்தம் -தொடர் - வைக்கப் படப்பு ரகசியம் - பகுதி-23 -எஸ்.ஷங்கர நாராயணன்.-தொடர்கதை

15. குழந்தை குறையில்லாது பிறக்க... - நெல்லை விவேகநந்தா. மகளிர் மட்டும் தகவல்கள்

16. தேசியக் கொடியில் துப்பாக்கி - தேனி.எஸ்.மாரியப்பன். - குறுந்தகவல்

17. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி - ஆர். ஏ. பரமன் (அரோமணி).- மனம்திறந்து கட்டுரை

18. நீண்ட ஆயுள் - வள்ளலார் வழி காட்டல்கள். - நெல்லை விவேகநந்தா ஆன்மீகத் தகவல்கள்

19. நம்மிடம் அகந்தை இருக்கலாமா? - சந்தியா கிரிதர்.- மனம்திறந்து கட்டுரை

20. இன்பம் இருப்பது எங்கே? - நெல்லை விவேகநந்தா. -சிறுவர் பகுதி கதை

21. வாரியார் நகைச்சுவைகள் - நெல்லை விவேகநந்தா. - சிரிக்க சிரிக்க தகவல்கள்

22. மக்களை ஏமாளி என்று நினைக்கலாமா? - எம்.ஜி.ஆர். பொன்மொழிகள்

23. அழியப் போவதில் ஆசை வைக்கலாமா? - குட்டிக்கதை

24. நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் கட்டுரை - பேசாமலும் பெயர் வாங்கலாம்! - தேனி.எம்.சுப்பிரமணி -பகுதி38.

25. சிக்கன் விந்தாரி - சித்ரா பலவேசம் - சமையலறை செய்முறை

26. சிக்கன் மஞ்சூரியன் - சித்ரா பலவேசம் - சமையலறை செய்முறை

27. பழமொழியை மாற்றிப் பயன்படுத்தலாமா? - நெல்லை விவேகநந்தா. -சிறுவர் பகுதி விளக்கம்

28. கடந்த பதிவு குறித்த வாசகர் கருத்துக்கள்

என புதிய பதிவுகள் அவற்றில் சுவையான பல செய்திகள்.... .... ....
மேலும் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள பல செய்திகளுடன் தொடர்ந்து வருகிறது. உங்கள் மனதைத் தொட வருகிறது

முத்துக்கமலம் மாதமிருமுறை இணைய இதழ் படியுங்கள்! உங்கள் படைப்புகளையும் அதில் பதிவு செய்யுங்கள்

முத்துக்கமலம் இணைய இதழைப் பார்வையிட கீழேயுள்ள முகவரியில் சொடுக்குங்கள்.
http://www.muthukamalam.com/homepage.htm

பொங்கல்வாழ்த்துக்கள்

Monday, January 4, 2010

முத்துக்கமலம் 01-01-2010

முத்துக்கமலம் இணைய இதழ் 01-01-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
அடையாளம்
* அருள்திரு. வே. மாசிலாமணி ஐயர் - பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்
சிறந்த விரிவுரையாளர். நற்செய்திப் போதனையாளர். பக்திப் பரவசமூட்டும், நெஞ்சத்தைத் தொடும் ஆன்மீக சொற்பொழிவுகளால் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர். சிறந்தத் தமிழ்ப் புலவர். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ இலக்கியப் பணியாற்றியவர். சிறந்த கவிஞர். இறைவனின் எழுத்தாணி. இசை ஞானமுடையவர். கர்நாடக இசையில் கரை கண்டவர். இசைக்கருவி மீட்டுவதில் வல்லவர். மது நிறை மலர் நாடும் வண்டுக் கூட்டமென இவர் வயலின் இசையில் மயங்கித் தழைத்தது மக்கள் கூட்டம். கவிதைகள், பாடல்கள் மூலம் சீரிய முறையில் பிரசாரம் செய்தவர். சிறந்த பாடகர். திருவிழாக்களிலும், வாரச் சந்தையிலும் பாடல்கள் பாடுவார்.
மேலும் படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_adaiyalam14.htm
கட்டுரை
* தமிழ் கிறிஸ்தவக் கீர்த்தனைகள் - பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்
கவிதைகள் முன் நிற்க கவிஞர்கள் பின் நிற்கிறார்கள். அதனால் தான் அநேக கவிஞர்களின் பெயர்கள் அகராதியிலிருந்தே விடுபட்டுப் போகின்றன. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, பாடல் புத்தகத்தில், ஒரு சில கவிஞர்களின் பெயர்கள் தரப்படவில்லை அல்லது தெரியாமலே போய் விட்டதைப் பார்க்கிறோம். அனாதைக் குழந்தைகளாய் பாடல்கள் காட்சி தருகின்றன. திரைப்படப் பாடல்களில் கவிஞர்களுக்கு கிடைக்கும் சிறிதளவு பெயர் கூட கிற்த்துவ மதப் பாடல்களில் கிடைப்பதில்லை. அநேக சந்தர்ப்பங்களில், ஒலிநாடாவில் நாம் கேட்கும் கிறிஸ்தவப் பாடல்கள், பாடலைப் பாடிய பாடகருக்குச் சொந்தம் என்ற முத்திரையில் தான் விற்பனைக்கு வருகின்றன. அப்படியென்றால், அந்தப் பாடல் பாடியவருக்கு மட்டும்தான் சொந்தம் என்பதாக இருக்கிறது. மேலும் படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_katturai70.htm
* கல்வி நேற்று இன்று நாளை -எஸ். இளங்கோவன்
பண்டைய தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும், சிற்றூர்களிலும் திண்ணைப் பள்ளிகள் இடம் பெற்றிருந்தன. பெருங்கோவில்களும், சிறு கோவில்களும் கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன என்பதில் ஐயமில்லை. மடங்களும், கல்வி நிலையங்களாகவும் நூல்களைப் பாதுகாத்து வைக்கும் “சரஸ்வதி பண்டார” ங்களாகவும் திகழ்ந்தன. பண்டைய கல்வி முறைகளையும், பண்டைய நூல்களையும் பாதுகாத்து வைத்த பெருமை மடங்களையே சாரும்.
மேலும் படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_katturai71.htm
கவிதை
* த‌ன்னைத்தானே விர‌ட்டி... -ராம்ப்ரசாத்.
* என் கவிதைகள்...? -பாளை சுசி.
* அன்பு என்பது... -ராம்ப்ரசாத்.
* நான் நானாகவா...? -த.சத்யா.
* காதல்...இது காதல்... -ராம்ப்ரசாத்.
* அள்ளிக் கொடுங்க... -பாளை சுசி.
* முகமூடி மனிதர்கள் -ராம்ப்ரசாத்.
* பக்தி -பொன்பரப்பியான்.
* நிர்வாணம்! -ராம்ப்ரசாத்.
* கதவொன்று திறக்கிறது... -சக்தி சக்திதாசன்.
* என்னவள் ஒரு தேவதை...! -ராம்ப்ரசாத்.
* கனவுகளில் வாழ்ந்திட...! -சக்தி சக்திதாசன்.
* துப்புர‌வுத் தொழிலாளி! -ராம்ப்ரசாத்.
* உறவுகள் என்பது... -வேதா. இலங்காதிலகம்.
* தனிமையின் நர்த்தனம்..! -ராம்ப்ரசாத்.
* 2009 ஆண்டின் குமுறல்...! -பொன்பரப்பியான்
கவிதைகளைப் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kavithai.htm
தமிழ் வலைப்பூ
1. விடுதலை ‌சிறு‌‌‌த்தைக‌ள் க‌ட்‌சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்த பல செய்திகள் மற்றும் அவருடைய கட்சியின் கருத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.
2. முருகனின் அறுபடை வீடுகள் படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சுவையான தகவல்களும் உள்ளன.
3. பெரியார் கொள்கையாளர் சுப.வீரபாண்டியன் கட்டுரைகள் அவரது இயக்கச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
4. இந்து மதக் கருத்துக்களை வலியுறுத்துவதுடன் விக்கிரமாதித்தன் கதைகளும் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தமிழ் வலைப்பூக்கள் முகவரிகள் பார்க்க...படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_tamilvalaipo74.htm
மனம் திறந்து
* வாழ்க்கைக்கு வழிகாட்டும் மந்திரங்கள் - சந்தியா கிரிதர்.
போராட்டம் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் மனம் குழப்பமடைந்து கலங்கிய நிலமையில் இருக்கின்றான். போராட்டமே அவனுடைய வாழ்க்கை என்று மாறியதால், அவன் சரியான திசையை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல், வழி தவறி செல்லுகின்றான். மாறுபட்ட சூழ்நிலைகள் அவனை தத்தளிக்க வைக்கின்றன.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_manam thiranthu31.htm
நல்ல பெயர் வாங்கலாம்-தொடர் கட்டுரை
* ஒதுங்கிப் போவது நல்லது! - பகுதி-37 - தேனி. எம்.சுப்பிரமணி
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தாலும் நம்மை வம்புக்கிழுக்கும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன் வைத்து நம்மை ஏதோ வீரமான போட்டிக்கு அழைப்பதைப் போல் அழைப்பார்கள். நம்மை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அவர்கள் நம்மை அழைத்து நாம் போகாமலிருந்தால் நமக்கு ஏதோ அவமானம் வந்து விடப் போகிறதாக எண்ணி முன்னே சென்று விட்டால் உண்மையிலேயே அவமானமடைய வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் ஒதுங்கிக் கொள்வதே நமக்கு சிறப்பு.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_katturai_special1.37.htm
தெருவாசகம்
* பெண்டாட்டியை விட என் மேல விருப்பம் - தொகுப்பு: தாமரைச்செல்வி
1. அவர் கல்யாணம் முடிச்சு இரண்டு பிள்ளைக்கு அப்பாவாயிட்டாலும் என்னைத் தேடி வராம இருக்க மாட்டாரு. அவரோட பெண்டாட்டியை விட என் மேலதான் அவருக்கு விருப்பம் அதிகம். நேரம் கிடைக்கிறப்பல்லாம் என்னைத் தேடி வந்துடுவாரு.
2. நான் எவ்வளவு தண்ணியடிச்சாலும் ஸ்டெடியாத்தான் இருப்பேன். இந்த ஊரில இரண்டு புல்லைக் கூட அடிச்சுட்டு ஸ்டெடியா இருக்கிற ஒரே ஆளு நானாத்தானிருப்பேன். கொஞ்சம் கையைப் பிடிச்சு அப்படியே வீட்டுல விட்டுருங்க....
3. எல்லோருமே யானை மேல போகனுமின்னு ஆசைப்பட்டால் முடியுமா? எல்லோருக்கும் உயரத்தில உட்காரனுமின்னுதான் ஆசை. அதற்கெல்லாம் கொடுப்பினை வேணும். இது தெரியாம பலரும் பள்ளத்தில விழுந்து அவஸ்தைப் படுறாங்க.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_ponmozhikal_theruvasakam20.htm
பொன்மொழிகள்
* நட்பு என்பது அவசியமா? - தொகுப்பு: தாமரைச்செல்வி
1. பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.
2. நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.
3. முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
4. நம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்.
5. இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_ponmozhikal61.htm
குட்டிக்கதை
* நல்லவர் யார்? கெட்டவர் யார்?
இருவரும் முதலில் தர்மனிடம் சென்றனர். கண்ணன் தருமனிடம், “எனக்குக் கெட்டவன் ஒருவன் தேவை. எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அழைத்து வா!” என்றார்.
நீண்ட நேரம் கழித்துத் திரும்பிய தர்மன், “இந்த நாட்டில் எல்லோரும் நல்லவர்களாகவே உள்ளனர். கெட்டவர்கள் யாருமே இல்லை. கெட்டவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான்.
அதன் பிறகு துரியோதனனை அழைத்த கண்ணன், “அத்தினாபுரத்தில் உள்ள எல்லோருமே நல்லவர்கள். கெட்டவன் ஒருவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் தருமன். நீ சென்று ஒரு நல்லவனை அழைத்து வா.” என்றான்.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai92.htm
கதை
* நண்பன் வீட்டில் என் மனைவி? - -ராம்ப்ரசாத்.
வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்...?
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kathai43.htm
முத்தயுத்தம் - தொடர்கதை
* இதயத்தின் குட்டிக் கர்ணம்.-எஸ். ஷங்கரநாராயணன்.
அதற்கே காத்திருந்தாப்ல மழை மெல்ல அடங்க ஆரம்பித்து அவன் வீட்டெல்லையைத் தொட்டதும் நின்றே விட்டது. மணி ரெண்டு இருக்கும். பயண அலுப்பு. மழையில் நனைந்த அலுப்பு என்று உடம்பே வலித்தது. போய்ப் படுக்கையில் விழுவம் என்றிருந்தது. கதவைத் தட்டிய ஜோருக்குத் திறந்தாள் பத்மினி. அட, விழித்திருந்தாள். என்ன கரிசனம். இந்த மழைல மச்சான் மாட்டிக்குவாகளோன்னு... ... ... ... அதாங்க இல்லத்தரசின்றது.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kathai_thodar2.22.htm
தையல் கற்றுக் கொள்ளுங்கள் -தொடர்
* குர்தா தைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - ஆர்.எஸ்.பாலகுமார்.
அனைத்து வயது தரப்பு மகளிராலும் விரும்பி உடுத்தப்படுகின்ற மார்பு உடை வகைப் பிரிவைச் சேர்ந்ததாக உள்ள உடைகளில் ஒன்று இந்த குர்தா. இதன் அமைப்பானது உடலோடு கச்சிதமாகப் பிடித்தவாறு தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. பக்கவாட்டினில் நீண்ட திறப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அரைக்கை, முக்கால்கை, முழுநீளக்கை என்று விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து வடிவமைத்துக் கொள்ளலாம்.
http://www.muthukamalam.com/muthukamalam_mahalir mattum_special1.3.htm
குறுந்தகவல்
* நாய் எப்போது வாலாட்டுகிறது? -தேனி.எஸ்.மாரியப்பன்.
1. கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
2. ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.
3. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
4. வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
5. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
6. ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
மேலும் பல தகவல்கள் அறிய...
http://www.muthukamalam.com/muthukamalam_kurunthagaval83.htm
சிரிக்க சிரிக்க
அதிகாலை நேரம். கணவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். மனைவி வேகவேகமாக அவனை எழுப்பினாள். “சீக்கிரம் எழுந்திருங்க... உங்க துணிகளையெல்லாம் எடுத்து வையுங்க... எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு” என்றாள்.
“சந்தோசமாயிருக்கு. இப்ப நாம எங்கே போகிறோம்? ஊட்டியா? சிம்லாவா?” என்றான் கணவன்.
“நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க...! மதியத்துக்குள்ள நீங்க என் வீட்டைக் காலி செய்திடுங்க...” என்றாள் மனைவி.
மேலும் பல சிரிப்புகள் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_sirikka sirikka50.htm
அப்பாவி சுப்பையா பதில்கள்
* முதலிரவில் லைட்டை அணைப்பது ஏன்? -தேனி.எஸ்.மாரியப்பன்.
1. மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?
2. என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே?
3. போலி டாக்டருன்னு தெரிந்தும் அவரிடம் போய் வைத்தியம் பார்க்கறீங்களே?
4. நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்...
5. இன்னும் உங்களுக்கு ஊசியே போடலை. அதற்குள் இப்படி கத்துகிறீர்களே?
-இதற்கு அப்பாவி சுப்பையா பதில்கள் என்னவாக இருக்கும்?
தெரிந்து கொள்ள விருப்பமா...
http://www.muthukamalam.com/muthukamalam_sirikka sirikka_appavi21.htm
அறிவிப்புகள்
* சிறுகதை, கவிதைப் போட்டிகள்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் பங்கு பெறலாம்.
முழு விபரம் அறிய
http://www.muthukamalam.com/muthukamalam_arivippukal.htm
உங்கள் கருத்து
முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான படைப்புகள் குறித்த வாசகர் கருத்துக்கள் அறிய
http://www.muthukamalam.com/muthukamalam_ungal karuthu.htm
மேலும் முந்தைய பதிவுகளில் வெளியானவை அனைத்தும் அறிய
முத்துக்கமலத்தின் முகப்புப்பக்கம் செல்க...
http://www.muthukamalam.com/